< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது:  பிரதமர் மோடி வரவேற்பு
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது: பிரதமர் மோடி வரவேற்பு

தினத்தந்தி
|
11 Dec 2023 1:31 PM IST

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான அறிவிப்பாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் நம்பிக்கை, வளர்ச்சிக்கான அறிவிப்பாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்