< Back
தேசிய செய்திகள்
படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க முடிவு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
தேசிய செய்திகள்

படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க முடிவு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

தினத்தந்தி
|
15 March 2023 2:00 PM GMT

படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,


நாட்டில் விரைவு ரெயில் போக்குவரத்தின் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய மந்திரி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து கூறியதாவது:- 2023 - 24ம் ஆண்டிற்குள் 120 வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 120 ரெயில் பெட்டிகளில் 75 பெட்டிகள் இருக்கையுடனும், 27 பெட்டிகள் படுக்கை வசதியுடனும் இருக்கும்.

நாடு முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரெயில்களை இயக்க 8,000 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. சரக்குகளை கையாள்வதற்கு புதிய முனையங்கள் அமைக்கும் திட்டம் இல்லை என்றும் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்