< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
இந்தியா- பூட்டான் இடையே ரெயில் பாதை அமைக்க முடிவு

4 April 2023 4:01 PM IST
இந்தியா வந்துள்ள பூட்டான் அரசர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி,
இந்தியாவில் இருந்து பூட்டான் நாட்டுக்கு ரெயில் பாதை அமைக்க முடிசெய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பூட்டான் நாட்டு அரசர் ஜிக்மெம் வாங்சுக் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டிற்கும் இடையில் ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.