< Back
தேசிய செய்திகள்
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் - போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
4 Jan 2024 5:02 PM IST

அஜித் யாதவ் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவு வெளியிட்ட அஜித் யாதவ் என்ற நபர் மீது ருத்ராபூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே அஜித் யாதவ் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக கடந்த அக்டோபர் 2-ந் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள தியோரியா மாவட்டம் பதேபூர் கிராமத்தில், நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வன்முறையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரேம் யாதவ் என்பவர், அரசு நிலத்தில் வீடு கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வீட்டை இடிக்கக் கூடாது என குறிப்பிட்டு, அஜித் யாதவ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அஜித் யாதவ் பதிவிட்டிருந்த நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்