< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டிய துணை முதல் மந்திரிக்கு கொலை மிரட்டல்: வீடியோவை பகிர்ந்த நபர் கைது
|1 March 2024 12:51 PM IST
சாவந்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தின் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கவ்ரன் விஷ்லேஷன்' என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது தேவேந்திர பட்னாவிசுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். இந்த வீடியோவை யோகீஷ் சாவந்த் என்ற நபர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக யோகீஷ் சாவந்தை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.