< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
தேசிய செய்திகள்

பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
11 Sept 2022 8:30 PM IST

பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் ராய். பா.ஜனதா பிரமுகர். இந்த நிலையில் அவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்து அழைப்பு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சந்தோஷ் ராய், பெல்லாரே போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், பெல்லாரேவை சேர்ந்த சப்ரீத் என்பவர், செல்போனில் என்னை தொடர்புகொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பிரசாந்த் ராய் புகார் அளிக்க சென்றபோது, அவருடன் ஏராளமான இந்து அமைப்பினரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெல்லாரே போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்ரீத் (வயது 25) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான சப்ரீத், எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர், பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலையில் கைதாகி உள்ள ஷபீக்கின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்