< Back
தேசிய செய்திகள்
மின்னஞ்சல் மூலம் முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டல்..!
தேசிய செய்திகள்

மின்னஞ்சல் மூலம் முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டல்..!

தினத்தந்தி
|
28 Oct 2023 11:40 PM IST

கொலை மிரட்டல் குறித்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பொறுப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மும்பை,

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபர்கள், முகேஷ் அம்பானி தங்களுக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும், இந்தியாவிலேயே தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்களிடம் உள்ளனர் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மின்னஞ்சல் குறித்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பொறுப்பாளர் மும்பையில் உள்ள காம்தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் கொலை மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்