< Back
தேசிய செய்திகள்
ஒரு வயது குழந்தையை கொன்ற வழக்கில் வாலிபருக்கு மரண தண்டனை; பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

ஒரு வயது குழந்தையை கொன்ற வழக்கில் வாலிபருக்கு மரண தண்டனை; பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
19 Nov 2022 6:45 PM GMT

ஒரு வயது குழந்தையை கொன்ற வழக்கில் வாலிபருக்கு மரண தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

ஒரு வயது குழந்தை கொலை

பெங்களூரு ராஜகோபால் நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் தொழிலாளி, தனது குழந்தையை அதேப்பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 25) என்பவரிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார்.

இந்த நிலையில் மூர்த்தி அந்த குழந்தையை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது குழந்தை அழுததால், மூர்த்தி குழந்தையை கொலை கொலை செய்தார். பின்னர் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக குழந்தையின் உடலை எரித்தார். அத்துடன் குழந்தையின் தலையில் கல்லையும் போட்டுள்ளார்.

வாலிபருக்கு மரண தண்டனை

இதுகுறித்து தொழிலாளி கொடுத்த புகாரின்பேரில், ராஜகோபால் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யஷ்வந்தபுரம் பகுதியில் உள்ள நண்பரின் அறையில் பதுங்கி இருந்த மூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டிலும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு நடந்திருந்தது.

இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, மூர்த்தி மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்