< Back
தேசிய செய்திகள்
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
தேசிய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
20 May 2024 6:24 AM GMT

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் அதிபர் ஈப்ராகிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராகிம் ரைசியின் மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராகிம் ரைசி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் மற்றும் அந்நாட்டு வெளியுறவு மந்திரி உசைன் அமீர் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுடனான எனது சந்திப்புகளை நினைவுக்கு வருகிறது குறிப்பாக ஜனவரி 2024ல் அவர்களுடன் நான் நடத்திய சந்திப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். இந்த சோகத்தின் போது ஈரான் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்." என்றார்.

மேலும் செய்திகள்