< Back
தேசிய செய்திகள்
துவாரகா சங்கராச்சாரியார் மரணம்
தேசிய செய்திகள்

துவாரகா சங்கராச்சாரியார் மரணம்

தினத்தந்தி
|
11 Sept 2022 11:38 PM IST

மத்தியபிரதேச மாநிலம் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சொரூபானந்த சரஸ்வதி காலமானார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சொரூபானந்த சரஸ்வதி காலமானார். அவருக்கு வயது 98. நரசிங்பூர் மாவட்டம் ஜோதேஷ்வர் தாமில் உள்ள அவரது ஆசிரமத்தில் அவர் மறைந்தார். உயிர் பிரிந்தபோது, அவரை சுற்றி சீடர்கள் நின்றிருந்தனர்.

சங்கராச்சாரியார் மறைந்த செய்தியை அறிந்தவுடன், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஆசிரமத்துக்கு திரண்டு வந்தனர். சங்கராச்சாரியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

துவாரகா சங்கராச்சாரியாருக்கு வெளிநாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்