< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு திருப்பதியில் 21-ந்தேதி 6 மணி நேரம் தரிசனம் ரத்து
|19 March 2023 5:48 PM IST
மார்ச் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 6மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 6மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பு ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
ஆழ்வார் திருமஞ்சனம் அதற்கு முந்தைய தினம் நடைபெறும். இதையொட்டி வரும் 21ம் தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரை கோயில் தூய்மைப்படுத்தப்பட்டு, மூலவர் சிலை முழுவதுமாக துணியால் மூடப்பட்டு சுத்தம் செய்யப்படுவதுடன், கோயில் முழுவதும் வாசனை திரவியம் தெளிக்கப்படும்.
அதன்பிறகு மூலவர் மீதிருந்து துணி அகற்றப்பட்டு சிறப்பு பூசைகள் செய்யப்படும். இதனால் மதியம் 12 மணிக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.