< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
|22 Feb 2023 7:25 PM IST
திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை (பிப்.23) வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி,
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதம் தோறும் இணையதளம் வாயிலாக அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை பிப்.23-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
தேவஸ்தான இணையதளமான tirupatibalaji.ap.gov.in மூலம் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.