< Back
தேசிய செய்திகள்
பண்ட்வாலில்  தலித் சிறுமி பலாத்கார  வழக்கில் மேலும் 2 பேர் கைது
தேசிய செய்திகள்

பண்ட்வாலில் தலித் சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் 2 பேர் கைது

தினத்தந்தி
|
3 Aug 2023 12:15 AM IST

பண்ட்வாலில் தலித் சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். தலித் சமூகத்தை சேர்ந்த அந்த சிறுமியை 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இந்தநிலையில் சிறுமி வீட்டில் யாரிடமும் பேசமால் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர்.

அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விட்டலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூடபித்ரியை ேசர்ந்த அக்ஷய் தேவடிகா (வயது 25), பேயாறு பகுதியை சேர்ந்த கமலாக்ஷா (30), பேரிபடாவை சேர்ந்த சுகுமார் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இந்தநிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். நேற்று சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் ஜெயபிரகாஷ், ராஜா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்