< Back
தேசிய செய்திகள்
தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டரின் செல்போன் எண்ணை முடக்கி மோசடி செய்ய முயற்சி
தேசிய செய்திகள்

தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டரின் செல்போன் எண்ணை முடக்கி மோசடி செய்ய முயற்சி

தினத்தந்தி
|
15 Sep 2022 7:00 PM GMT

தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டரின் செல்போன் எண்ணை முடக்கி பணம் மோசடி செய்ய முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு;

கலெக்டரின் செல்போன் எண் முடக்கம்

தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரா. இவரது செல்போன் எண்ணை, மர்மநபர்கள் முடக்கி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது கலெக்டர் ராஜேந்திராவின் செல்போன் எண்ணை முடக்கி அதனை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் மர்மநபர்கள் பணம் மோசடி செய்ய முயன்றது உறுதியானது. அதாவது செல்போன் எண்ணை முடக்கி வாட்ஸ் அப்பில் கலெக்டர் ராஜேந்திராவின் புகைப்படம் மற்றும் அவரது பெயரை வைத்து பணம் மோசடி செய்ய முயன்றுள்ளனர்.

வலைவீச்சு

இதுகுறித்து மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.இதற்கிடையே கலெக்டர் ராஜேந்திரா, பொதுமக்களுக்கு தெரிவித்ததாவது:-

'எனது செல்போன் எண்ணை மர்மநபர்கள் முடக்கி பணம் மோசடி செய்ய முயன்றுள்ளனர்.எனவே அந்த எண்ணில் இருந்து உதவி என்ற பெயரில் பணம் கேட்டால் பொதுமக்கள் அனுப்பி வைக்க வேண்டாம். மேலும் அந்த செல்போன் எண்ைண பிளாக் செய்து கொள்ளுங்கள்' என்றார்.

மேலும் செய்திகள்