< Back
தேசிய செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி செய்திகள்
மாவட்ட செய்திகள்
தேசிய செய்திகள்

'தினத்தந்தி 'புகார் பெட்டி செய்திகள்

தினத்தந்தி
|
24 May 2022 10:58 PM IST

நடைபாதையில் குவிந்து கிடக்கும் கற்கள்

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

பெங்களூரு ஜெயநகர் 9-வது மெயின் ரோடு 5-வது பிளாக் பகுதியில் ஒரு வங்கி உள்ளது. அந்த வங்கியின் எதிரே சாலையோரம் குப்பை கழிவுகள் மலை போல குவிந்து கிடக்கிறது. குப்பைகள் மட்டுமின்றி அங்கு கட்டிட கழிவுகள், மரக்கழிவுகளும் குவிந்து உள்ளன. குப்பையில் இருந்து தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். அந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பசவமூர்த்தி, ஜெயநகர், பெங்களூரு

நடைபாதையில் கற்கள்

பெங்களூரு விக்டோரியா லே-அவுட் பால்ம்குரோவ் ரோட்டில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் பெரிய கற்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த ரோட்டில் மின்வாரிய அலுவலகமும் உள்ளது. இதனால் மின்வாரிய அலுவலகம் செல்லும் பாதசாரிகள் அந்த நடைபாதையை தான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அங்கு கற்கள் குவிந்து கிடப்பதால் நடைபாதையை, பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த கற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரேவதி, விக்டோரியா லே-அவுட், பெங்களூரு


மேலும் செய்திகள்