< Back
தேசிய செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
மாவட்ட செய்திகள்
தேசிய செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 May 2022 9:19 PM IST

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலை

பெங்களூரு நகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. இதேபோல், சர் எம்.வி. லே-அவுட் முதலாவது பிளாக்கில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையில் முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள், பி.டி.ஏ. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிர் பலி ஏற்படும் முன், சாலையை சீரமைக்க வேண்டும்.

- ஷரத், சர் எம்.வி. லே-அவுட், பெங்களூரு.

சாலையோரம் கிடக்கும் குப்பை கழிவுகள்

பெங்களூரு சி.வி.ராமன்நகர் பகுதியில் சாலையோரம் குப்பை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பை கழிவுகளை சாலையோரம் வீசி செல்கிறார்கள். அதனை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களும் அப்புறப்படுத்துவதில்லை. இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அந்த குப்பை கழிவுகளை மாடுகள், நாய்கள் சாலையில் இழுத்து போடுகின்றன. இதனால் அங்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்றவும், மீண்டும் அங்கு குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அக்‌ஷதா, சி.வி.ராமன் நகர், பெங்களூரு.

மேலும் செய்திகள்