< Back
தேசிய செய்திகள்
சிலிண்டர் விலை குறைப்பு; ஏழைகளுக்கு பலன் தரப்போவதில்லை - ஒவைசி கருத்து
தேசிய செய்திகள்

'சிலிண்டர் விலை குறைப்பு; ஏழைகளுக்கு பலன் தரப்போவதில்லை' - ஒவைசி கருத்து

தினத்தந்தி
|
30 Aug 2023 12:39 AM IST

சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை ஏழைகளுக்கு பலன் தரப்போவதில்லை என்று அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

ராஞ்சி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு ஏழைகளுக்கு பலன் தரப்போவதில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இது குறித்து ராஞ்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை குறையவில்லை. ஜி-20 மாநாட்டுக்கு சுமார் 3,500 முதல் 4,000 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தை கியாஸ் சிலிண்டர்களுக்கு உபயோகப்படுத்தி இருந்தால், சிலிண்டர்களின் விலை வெறும் 300 ரூபாயாக குறைந்திருக்கும். இந்த விலை குறைப்பு நடவடிக்கை ஏழைகளுக்கு பலன் தரப்போவதில்லை."

இவ்வாறு அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்