< Back
தேசிய செய்திகள்
உருவானது தேஜ் புயல் - அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்
தேசிய செய்திகள்

உருவானது 'தேஜ்' புயல் - அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்

தினத்தந்தி
|
21 Oct 2023 9:58 AM IST

அரபிக்கடலில் 'தேஜ்' புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் 'தேஜ்' புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.

இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவி வந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு அரபிக் கடலில் 'தேஜ்' புயல் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும் என்றும், மேலும் 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புயலானது 25ம் தேதி அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்