< Back
தேசிய செய்திகள்
பிபர்ஜாய்  புயல் மிக தீவிர புயலாக வலுவிழந்தது
தேசிய செய்திகள்

'பிபர்ஜாய்' புயல் மிக தீவிர புயலாக வலுவிழந்தது

தினத்தந்தி
|
13 Jun 2023 8:52 AM IST

போர்பந்தரில் இருந்து 290 கி.மீ ஜக்காவு துறைமுகத்தில் இருந்து 360 கி.மீ தொலைவில் பிபர்ஜாய் புயல் உள்ளது.

புதுடெல்லி,

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 'பிபர்ஜாய்' என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கி.மீ. தென்மேற்கில் புயல் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 14-ந் தேதிவரை தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் என்று தெரிகிறது. அதன்பிறகு, 15-ந் தேதி பிற்பகலில் குஜராத் மாநிலம் ஜகாவு துறைமுகம் அருகே புயல் கரையை கடக்கிறது. அப்போது, மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும் புயல் வருகையையொட்டி, வானிலை ஆராய்ச்சி மையம், 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய், மிக தீவிர புயலாக வலுவிழந்தது. வரும் 14ம் தேதி காலை வரை வடக்கில் நகர்ந்து, அதன் பின் வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும். போர்பந்தரில் இருந்து 290 கி.மீ ஜக்காவு துறைமுகத்தில் இருந்து 360 கி.மீ தொலைவில் பிபர்ஜாய் புயல் உள்ளது.

குஜராத் ஜக்காவு துறைமுகம் அருகே ஜூன் 15-ல் மாலைக்குள் பிப்பர்ஜாய் கரையை கடக்கும். 15-ம் தேதி நண்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் மாலையில் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்