< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்
|24 Oct 2023 7:25 AM IST
ஹமூன் புயல் வடமேற்கு வங்க கடல் பகுதியில் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும்.
புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல், ஒடிசா, மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தது.
இந்த சூழலில், ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.