< Back
தேசிய செய்திகள்
வங்கதேசம் அருகே கரையை கடந்தது ஹமூன்புயல்
தேசிய செய்திகள்

வங்கதேசம் அருகே கரையை கடந்தது 'ஹமூன்'புயல்

தினத்தந்தி
|
25 Oct 2023 1:24 AM GMT

ஹமூன் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலானது நேற்று அதிதீவிர புயலாக மாறி பின்னர் மிகத்தீவிர புயலாக மாறியது.

இந்த புயலானது இன்று ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தீவிர புயலாக இருந்த 'ஹமூன்' புயலாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்