< Back
தேசிய செய்திகள்
சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது
தேசிய செய்திகள்

சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது

தினத்தந்தி
|
30 July 2022 8:30 PM IST

உப்பள்ளியில், சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி;


உப்பள்ளி கேஷ்வாப்பூரில் ரெயில்வே விருந்தினர் மாளிகை வளாகத்தில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு ரெயில்வே விருந்தினர் மாளிகை வளாகத்தில் நின்றிருந்த 4 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் செட்டில்மெண்ட் கங்காதரா நகரை சேர்ந்த பக்கீரப்பா கட்டிமணி, அப்பண்ணா கட்டிமணி, மாருதி கட்டிமணி என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்