< Back
தேசிய செய்திகள்
விமானத்தின் கழிவறையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு
தேசிய செய்திகள்

விமானத்தின் கழிவறையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
25 Dec 2022 1:38 PM IST

கொச்சி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்றின் கழிவறையில் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

கொச்சி,

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கண்டெடுத்தனர்.

துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானத்தின் கழிவறையில் இருந்து 815 கிராம் எடையுள்ள தங்கம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பயத்தின் காரணமாக அதை கடத்தி வந்த நபர் விமானத்தின் கழிவறையிலேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், முன்னதாக இன்று கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்த போது அவரது உடலில் மறைத்து வைக்கப்படிருந்த ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்