< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தொழிலாளி வீட்டுக்கு ரூ.22 ஆயிரம் மின் கட்டணம்
|1 Nov 2022 12:15 AM IST
பெங்களூருவில் தொழிலாளி வீட்டுக்கு ரூ.௨௨ ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு பன்னரகட்டா ரோடு, தொட்டகம்மனஹள்ளி அருகே வசிப்பவர் ராஜு, கூலித் தொழிலாளி. இவர் சிறிய வீட்டில் வசிக்கிறார். அவரது வீட்டுக்கு மாதந்தோறும் ரூ.200 முதல் ரூ.300 வரை மின் கட்டணம் வரும். இந்த நிலையில், ராஜு வீட்டுக்கு ரூ.22 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தும்படி மின்வாரியம் சார்பில் ரசீது அனுப்பப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். இதற்கிடையே மின் கட்டண பில் தொகை சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. இதையடுத்து, சுதாரித்து கொண்ட மின்வாரிய அதிகாரிகள், செப்டம்பர் மற்றும் அக்டோபர்(கடந்த மாதம்) சேர்த்து ரூ.1,030 கட்டணம் செலுத்தும்படி கூறினர். அதன்படி, ரூ.1,030 மட்டும் ராஜு மின் கட்டணம் செலுத்தினார்.