< Back
தேசிய செய்திகள்
பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு: ஜூன் 1-ந் தேதி தொடக்கம்
தேசிய செய்திகள்

பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு: ஜூன் 1-ந் தேதி தொடக்கம்

தினத்தந்தி
|
29 Dec 2022 2:47 AM IST

ஜூன் 1-ந் தேதி பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட்), அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும்.

தேசிய தேர்வு முகமை நேற்று இதை அறிவித்தது. இதற்கான விண்ணப்ப நடைமுறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு மாணவர்களுக்கு கியூட் தேர்வு மதிப்பெண் பெரிதும் உதவும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்