< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளத்தில் பள்ளிக்கூட வளாகத்தில் கிடந்த 3 வெடிகுண்டுகள்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பள்ளிக்கூட வளாகத்தில் கிடந்த 3 வெடிகுண்டுகள்

தினத்தந்தி
|
22 Nov 2022 1:39 AM IST

மேற்கு வங்காளத்தில் பள்ளிக்கூட வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

சின்சுரா,

மேற்கு வங்காள மாநிலத்தின் ஹுக்லி மாவட்டம் சின்சுரா பகுதியில் ஒரு ஆரம்ப பள்ளிக்கூட வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வெடிகுண்டு போன்ற பொருட்கள் பள்ளிக்கூட வளாகத்தில் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து வெடிகுண்டுகளை கைப்பற்றினர். பள்ளிக்கூட வளாகத்திற்கு வெடிகுண்டுகள் எப்படி வந்தன? என்பது பற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்