< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க பஞ்சாப் முதல் மந்திரி மறுப்பு
|1 Jun 2023 5:56 PM IST
சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஏற்க மறுத்துள்ளார்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலத்தில் முதல் மந்திரி பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் மத்திய அரசு சி.ஆர்.பி.எப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.
சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் ஒதுக்கிய நிலையில், பகவந்த் மான் சிங் அதனை ஏற்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக பகவந்த் மான் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மத்திய அமைச்சகத்தின் சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு எனக்கு வேண்டாம் என்றும், மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.