< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் போலீஸ் தேர்வில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

காஷ்மீர் போலீஸ் தேர்வில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி
|
8 Nov 2022 12:22 AM IST

காஷ்மீர் போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் 1,200 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனத்துக்காக தேர்வு நடந்தது. இந்த தேர்வை 1 லட்சம் பேர் எழுதினர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

தேர்வு எழுதியவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து தேர்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் கடந்த சில மாதங்களாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் காஷ்மீர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்தவில் நடந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத்திய ரிசர்வ் படை வீரர் உள்பட 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், "முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் காஷ்மீர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் சிங், மத்திய ரிசர்வ் படை வீரர் பிரதீப் குமார் ஆகிய இருவரும் வினாத்தாள் அச்சிடப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் 2 பேருடன் கூட்டு சேர்ந்து சில தேர்வர்களிடம் இருந்து ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு வினாத்தாள்களை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படை யில் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

மேலும் செய்திகள்