< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சி.ஆர்.பி.எப். பெண் அதிகாரிகள் 2 பேர் முதன்முறையாக ஐ.ஜி. அந்தஸ்துக்கு பதவி உயர்வு
|2 Nov 2022 9:36 PM IST
நாட்டில் சி.ஆர்.பி.எப். பெண் அதிகாரிகள் 2 பேர் முதன்முறையாக ஐ.ஜி. அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
புதுடெல்லி,
நாட்டில் முதன்முறையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த பெண் அதிகாரிகள் 2 பேர் ஐ.ஜி. அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதன்படி, ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள சீமா துண்டியா பீகார் பிரிவு சி.ஆர்.பி.எப்.பின் தலைமை பதவியை வகிக்க இருக்கிறார்.
இதேபோன்று அதிரடி விரைவு படையின் தலைவராக ஐ.ஜி. ஆன்னி ஆபிரகாம் பதவி வகிக்க உள்ளார். இதனை சி.ஆர்.பி.எப். வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.