< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முக்கிய முடிவு
|13 Oct 2022 10:38 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏழுமலையானை வழிபட திருப்பதி மலையில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இலவச தரிசனத்துக்காக 24 மணிநேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 79 ஆயிரத்து 370 பேர் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தினால் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் விஐபி தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.