< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம் - மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திடீர் ஆய்வு
|15 Dec 2022 7:01 PM IST
மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லி விமான நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் கடந்த சில தினங்களாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புத்தாண்டு மற்றும் குளிர்கால விடுமுறைகள் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் மேற்கொள்ள வேண்டிய சோதனை நடைமுறைகளை முடித்து விட்டு தங்கள் விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லி விமான நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள விமான நிலைய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோதனை நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.