மேல்கோர்ட்டில் நிவாரணம் பெறாவிட்டால் அரசு பங்களாவை ராகுல் காலி செய்ய நெருக்கடி
|ராகுல் காந்தி, டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார்.
புதுடெல்லி,
எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அந்த பங்களாவில் தான் குடியிருக்கிறார். தற்போது அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அவர் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கருத்து தெரிவிக்கையில், "அவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர் அரசு பங்களாவில் குடியிருக்க முடியாது. பதவி பறிப்பு உத்தரவு வெளியான ஒரு மாத காலத்தில் அவர் பங்களாவை காலி செய்து விட வேண்டும்" என தெரிவித்தார்.
மேல் கோர்ட்டில் தன் மீதான தீர்ப்புக்கு தடை உத்தரவு பெறாவிட்டால், ராகுல் காந்தி பங்களாவை காலி செய்ய வேண்டியது வரும்.