< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்'- கேரள கவர்னர் கருத்து
|23 July 2023 9:02 PM IST
பெண்களின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்போரிடம் எந்தவித சமரசமும் காட்டக் கூடாது என்று ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வரும் கலவரம் மற்றும் அங்குள்ள பழங்குடி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் ஆகியவை குறித்து எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அந்த மாநிலத்தின் கவர்னர் ஆரிப் முகமது கான், மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்போரிடம் எந்தவித சமரசமும் காட்டக் கூடாது என்றும் தெரிவித்தார்.