< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா..!
|16 May 2023 5:49 PM IST
தனது மனைவியும் குஜராத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏவுமான ரிவபா ஜடேஜா உடன் சென்று பிரதமர் மோடியை இன்று சந்தித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஜடேஜா பிரதமர் மோடியை இன்று சந்தித்துள்ளார்.ஜடேஜா தனது மனைவியும் குஜராத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏவுமான ரிவபா ஜடேஜா உடன் சென்று பிரதமர் மோடியை இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ஜடேஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது . கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அனைவரையும் ஊக்குவிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.என கூறியுள்ளார்.