< Back
தேசிய செய்திகள்
மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்த கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்..!
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்த கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்..!

தினத்தந்தி
|
2 March 2023 4:12 PM IST

அமித் ஷாவை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சந்தித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

இன்று சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. இதுவொரு சுவாரஸ்யமான உரையாடல். கனிவான, மற்றும் ஊக்கம் கொடுக்கும் மனிதர். நன்றி!' என அமித் ஷாவை டேக் செய்து இந்தப் படங்களை பீட்டர்சன் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2004 முதல் 2014 வரை இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடியவர் பீட்டர்சன். 104 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடி 13,797 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்