< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பணியாளர் பாதுகாப்பு விதிமீறல் - 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம்
|22 March 2024 6:46 PM IST
பணியாளர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதற்காக ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
விமானப் பணியாளர்களுக்கான நேர வரம்புகள், விமானக் குழுவினரின் பணிச்சுமை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) ரூ.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் டி.ஜி.சி.ஏ. நடத்திய நேரடி தணிக்கையில் 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இது தொடர்பாக 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு கடந்த 1-ந்தேதி டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.