< Back
தேசிய செய்திகள்
கிரேன் மோதி தொழிலாளி சாவு
தேசிய செய்திகள்

கிரேன் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
16 Oct 2022 12:30 AM IST

என்.ஆர்.புரா அருகே கிரேன் மோதி விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா டவுன் பகுதியை சேர்ந்தவர் மாயாசாலி(வயது 45). கூலி ெதாழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் உள்ள சிருங்கோி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக கிரேன் வந்துள்ளது. இந்த நிலையில் எதிா்பாராதவிதமாக கிரேன், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாயாசாலி மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாயாசாலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்