< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காது பிரச்சனைகளுக்கு நண்டு காணிக்கை... வியக்க வைக்கும் வினோத வழிபாடு
|19 Jan 2023 10:34 AM IST
நண்டு காணிக்கை செலுத்தி வழிபட்டால், காது தொடர்பான பிரச்சனைகள் குணமடையும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரத்,
சிவன் கோயிலில் நண்டு காணிக்கை செலுத்தி வழிபாடு காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதாக மக்கள் நம்பிக்கை குஜராத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் நண்டு காணிக்கை செலுத்தி வழிபட்டால், காது தொடர்பான பிரச்சனைகள் குணமடையும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம், சூரத்தில் அமைந்துள்ள ராம்நாத் ஷிவ் கெலா என்ற சிவன் கோயிலில், உயிருடன் இருக்கும் நண்டை காணிக்கையாக செலுத்தினால் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடையும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆண்டிற்கு ஒரு முறை இவ்வாறு காணிக்கை செலுத்தும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.