< Back
தேசிய செய்திகள்
8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
தேசிய செய்திகள்

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

தினத்தந்தி
|
7 Jun 2023 1:16 AM IST

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கோலார் தங்கவயல்:

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

8 வயது சிறுமி

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவை சேர்ந்தவர் முருகேஷ்(வயது 32). கூலி தொழிலாளியான இவர், அதே தாலுகாவை சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஆண்டு(2022) அக்டோபர் மாதம் 9-ம் தேதி சாக்லெட் கொடுப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதை பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். பெற்றோர் சிறுமிக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து முல்பாகல் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசை கைது செய்தனர். மேலும் அவர் மீது கோலார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

30 ஆண்டுகள் சிறை

அதையடுத்து இச்சம்பவம் தொடர்பான வழக்கு கோலார் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அவர் வழக்கில் குற்றவாளியான முருகேசுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ.9 லட்சம் வழங்கும்படி கூறி நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்