வாடகைத் தாய்மார்களுக்கு 3 வருட சுகாதார காப்பீட்டை தம்பதிகள் வாங்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
|தம்பதிகள் 3 வருடத்திற்கு வாடகை தாய்மார்களுக்கு சுகாதார காப்பீட்டை வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வாடகைத் தாய் ஒழுங்குமுறை விதிகளின்படி, வாடகைத் தாய் வழியாக குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் 36 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு ஆதரவாக பொது சுகாதார காப்பீட்டை வாங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டள்ள விதிமுறைகளில் கூறியிருப்பதாவது :
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் அல்லது முகவரிடமிருந்து 36 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு ஒரு பொது சுகாதார காப்பீட்டை தம்பதியர் வாங்க வேண்டும். கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பிரசவ சிக்கல்களால் ஏற்படும் அனைத்துச் சிக்கல்களுக்கும் அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்ட போதுமான தொகையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டின் மருத்துவ சட்டத்தின்படி வாடகைத் தாய், வாடகைத் தாய் முறையின் போது கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.