< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் சூனியம் செய்ததாக கூறி கணவன், மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் சூனியம் செய்ததாக கூறி கணவன், மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்

தினத்தந்தி
|
19 Jun 2023 4:57 PM IST

தெலுங்கானாவில் சூனியம் செய்ததாக கூறி கணவன், மனைவியை கிராம மக்கள் சிலர் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரெட்டி,

தெலுங்கானாவின் சங்கரெட்டியில் சூனியம் செய்ததாக கூறி கணவனையும் மனைவியையும் கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வீடியோவில் தம்பதி மரத்தில் கட்டப்பட்டிருப்பதையும் கிராம மக்கள் அங்கு கூடியிருப்பதையும் காண முடிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சதாசிவப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொல்குரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

யாதையா மற்றும் அவரது மனைவி ஷியாமம்மா இருவரும் சூனியம் செய்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து கிராம மக்களில் சிலர் அவர்களது வீட்டுக்குள் புகுந்து அவர்களை இழுத்துச் சென்று அங்கு உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தம்பதியை மீட்டனர்.

அவர்களுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்றும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் நவீன் கூறினார்.

மேலும் செய்திகள்