< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அடுத்த 3 ஆண்டுகளில் நக்சல் பிரச்சினையில் இருந்து நாடு விடுபடும் - மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு
|20 Jan 2024 12:51 PM IST
சலோனிபாரியில் நடைபெற்ற சசாஸ்த்ர சீமா பாலின் 60-வது எழுச்சி தின கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
தேஜ்பூர்,
அசாம் மாநிலம் தேஜ்பூர் அருகே சலோனிபாரியில் நடைபெற்ற சசாஸ்த்ர சீமா பாலின் (எஸ்எஸ்பி) 60-வது எழுச்சி தின கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-
அனைத்து மத்திய ஆயுதப் போலீஸ் படைகளிலும், கலாசாரம், வரலாறு, நிலப்பரப்பு மற்றும் மொழி ஆகியவற்றை நுணுக்கமாக ஒருங்கிணைப்பதிலும், எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதிலும் எஸ்எஸ்பி தனித்துவமான பங்கை வகிக்கிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு நக்சல் பிரச்சினையில் இருந்து 100 சதவீதம் விடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.