இமாச்சலபிரதேசத்தில் வெற்றியை நெருங்கும் காங்கிரஸ்
|இமாச்சலபிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிம்லா,
இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இமாச்சலபிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
Live Updates
- 8 Dec 2022 11:25 AM IST
இமாச்சலபிரதேசத்தில் வெற்றியை நெருங்கும் காங்கிரஸ்
இமாச்சலபிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் 36 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் முன்னிலை.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது காங்கிரஸ் கட்சியின் 36 வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
- 8 Dec 2022 11:01 AM IST
தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 4 இடங்களில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளனர். மொத்தமுள்ள 68 தொகுதிகளில் ஆட்சியை அமைக்க 35 இடங்கள் தேவை
- 8 Dec 2022 10:46 AM IST
பாஜக 32 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 4 தொகுதிகளில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளனர்.