அசுர பலத்துடன் குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக
|குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்க உள்ளது.
காந்திநகர்,
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
Live Updates
- 8 Dec 2022 11:21 AM IST
குஜராத்தில் 151 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதன் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது.
- 8 Dec 2022 11:03 AM IST
135 பேரை பலி கொண்ட பால விபத்து நடைபெற்ற மொர்பி தொகுதியில் பாஜக முன்னிலை
காந்திநகர்,
குஜராத்தின் மொர்பி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, குஜராத் தேர்தலில் மொர்பி தொகுதியில் பாஜக வேட்பாளராக கந்திலால் அம்ருத்யா போட்டியிட்டார்.
இந்நிலையில், குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மொர்பி தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் 10 ஆயிரத்து 156 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
- 8 Dec 2022 10:38 AM IST
கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பின்னடைவு
குஜராத்தில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பின்னடைவு சந்தித்து வருகிறார்
- 8 Dec 2022 10:36 AM IST
பூபேந்திர படேல் 23,713 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
குஜராத் தேர்தல்: கட்லோதியா தொகுதியில் அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேல் 23,713 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!