< Back
தேசிய செய்திகள்
ஊழல் வழக்கு; சந்திரபாபு நாயுடுவின் காவல் வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிப்பு
தேசிய செய்திகள்

ஊழல் வழக்கு; சந்திரபாபு நாயுடுவின் காவல் வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிப்பு

தினத்தந்தி
|
19 Oct 2023 3:27 PM IST

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் காவல், வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

விஜயவாடா,

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஊழலால், அரசுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கான கோர்ட்டு, இந்த ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் காவலை, வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

நீதிபதி தீர்ப்பு வழங்கும் முன்பு, சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலையை பற்றி கேட்டார். சிறையில் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பற்றி சந்திரபாபு நாயுடு அச்சம் வெளியிட்டார் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்