< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அதிகரிக்கும் கொரோனா... சண்டிகரில் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு
|22 Dec 2023 3:34 PM IST
பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சண்டிகர்,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன.
அந்த வகையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.