< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு
மாநில செய்திகள்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு

தினத்தந்தி
|
16 March 2023 6:16 PM IST

கொரோனா தொற்று பரவல் குறித்து கண்காணிப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது."தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது, இது இந்தியாவின் சராசரி தொற்று விகிதம் 0. 61-ஐ விட அதிகமாக உள்ளது"

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறித்து கண்காணிப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுயுறுத்தியுள்ளது.

மேலும் கேரளா ,கர்நாடகா , மராட்டியம் , தெலுங்கானா குஜராத் மாநில செயலாளர்களுக்கும் மத்திய அரசு வலியுயுறுத்தியுள்ளது

மேலும் செய்திகள்