< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

'என்னை திருமணம் செய்துகொள்' என கேட்ட காதலி மீது கொடூர தாக்குதல்; காதலன் கைது, வீடு இடிப்பு - வீடியோ

தினத்தந்தி
|
25 Dec 2022 1:44 PM GMT

காதலன் கடுமையாக தாக்கியதில் மயக்க நிலைக்கு சென்ற காதலி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகீறார்.

போபால்,

மத்தியபிரதேச ரிவா மாவட்டம் மவ்கஞ்ச் நகரின் தாரா கிராமத்தை சேர்ந்த இளைஞன் பங்கஜ் திருப்பதி (வயது 24). டிரைவரான பங்கஜ் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலியான 19 வயது இளம்பெண் தனது காதலன் பங்கஜ்ஜிடம் கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த காதலன் பங்கஜ் தனது காதலி என்றும் பாராமல் அந்த இளம்பெண்ணை கொலை வெறியுடன் கடுமையாக தாக்கினார். தனது காதலியை தரையில் தள்ளிய பங்கஜ் தனது காலால் காதலியின் கழுத்து, முகத்தில் சரமாரியாக உதைத்தார். இதில், நிலைகுலைந்த காதலி உடனடியாக உடல் அசைவின்றி மயங்கி விழுந்தார். இதை அவ்வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

பின்னர், அந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும், பங்கஜ் தனது காதலியை தாக்கும் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திருமணம் செய்துகொள் என்று கேட்டதால் காதலியை சரமாரியாக தாக்கும் காதலனின் வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், காதலன் தாக்கியதில் படுகாயமடைந்த காதலிக்கு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், காதலியை தாக்கிவிட்டு உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரில் பதுங்கி இருந்த காதலன் பங்கஜ்ஜை நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நிலையில் தாரா கிராமத்தில் உள்ள பங்கஜ்ஜின் வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளினர். மேலும், பணி செய்ய தவறியதாக மவ்கஞ்ச் போலீஸ் நிலைய ஆய்வாளர் ஸ்வேதா மவ்ரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்கள் தப்பிக்க முடியாது என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகள்