மத்திய அரசின் முடிவுகளால் கூட்டுறவு துறையினர் மகிழ்ச்சியாக உள்ளனர் - நிர்மலா சீதாராமன்
|மத்திய அரசின் முடிவுகளால் கூட்டுறவு துறையினர் மகிழ்ச்சியாக உள்ளனர் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
மும்பை,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பா.ஜனதாவை பாராமதியில் பலப்படுத்தும் வகையில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டார். இதில், அவர் அங்கு நடந்த பல்வேறு நிகழச்சிகள் மற்றும் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டார்.
நேற்று முன்தினம் பாராமதி பகுதியை சோந்த கூட்டுதுறையினரிடம் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
தங்கள் அரசியல் லாபத்திற்காக கூட்டுறவு துறையை சீரழித்தவர்கள், அதற்கு தனியாக மந்திரி சபையில் துறை ஒதுக்க வேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால் பிரதமர் மோடி மத்திய அமைச்சகத்தில் கூட்டுறவு துறையை அமைத்தார்.
நான் வங்கி, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல பிரிவை சேர்ந்த கூட்டுறவு துறையினரை சந்தித்தேன். அவர்கள், கூட்டுறவு துறைக்கு மத்திய அரசு வழங்கிய பல சலுகைகள், முடிவுகளால் மகிழ்ச்சியாக உள்ளனர். மும்பையில் மெட்ரோ பணிகளில் ஏற்படுத்தப்பட்ட தாமதத்தால் ரூ.4 ஆயிரம் கோடி செலவு அதிகரித்து உள்ளது என்று அவர் கூறினார்.