< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2000 ரூபாயை எட்டும்: மம்தா பானர்ஜி
|29 Feb 2024 3:27 PM IST
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை ஏப்ரல் இறுதிக்குள் மத்திய அரசு கட்டி முடிக்க வேண்டும் என மம்தா கெடு விதித்துள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில்நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.1500 அல்லது ரூ.2000 ஆக உயர்த்தலாம். அதன்பிறகு நாமெல்லாம் விறகு அடுப்பை பயன்படுத்தும் பழைய நடைமுறைக்கு திரும்ப வேண்டும்.
மத்திய அரசு. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை ஏப்ரல் இறுதிக்குள் கட்டி முடிக்க வேண்டும். இல்லையென்றால் மே மாதத்திலிருந்து எங்கள் அரசாங்கம் அந்த வீடுகளை கட்டத் தொடங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.